மழை மாாியம்மன் கோவிலில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

மழை மாாியம்மன் கோவிலில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்;

Update:2023-05-03 04:49 IST

ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியில் பிரசித்தி பெற்ற மழை மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவிலில் கம்பம் நடப்பட்டது. நேற்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையிலேயே பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடிவிட்டு, தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். இதேபோல் பக்தர்கள் பலர் அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மாவிளக்கு பூஜையும், பொங்கல் விழாவும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு கம்பம் பிடுங்கும் விழாவும், இரவு 7 மணிக்கு மழை மாரியம்மனின் திருவீதி உலாவும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்