பங்குனி உத்திரத்தையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பங்குனி உத்திரத்தையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்;
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று (புதன்கிழமை) காலையில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இரவு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி -தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.