கோபி வடக்கு வீதியில் அமைந்துள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். நேற்று அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.