நாளை மறுநாள் அனுமன் ஜெயந்தி விழா: பக்தர்களுக்கு வழங்க 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நாளை மறுநாள் அனுமன் ஜெயந்தி விழா: பக்தர்களுக்கு வழங்க 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Update: 2022-12-20 22:29 GMT


அனுமன் ஜெயந்தி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். விழாவையொட்டி பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில்களில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. 4 மணிக்கு ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 5 மணிக்கு மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். மதியம் 1.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்படுகிறது. மாலை 5 மணிக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்படுகிறது.

விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், லட்டு, ஆரஞ்சு நிற கயிறு, செந்தூரம் ஆகியன வழங்கப்படும். இதையொட்டி ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் லட்டு தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. இதில் 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்