கவுந்தப்பாடி அருகே பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கவுந்தப்பாடி அருகே பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-11-13 20:26 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே உள்ள சிங்காநல்லூர் கிராமம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 10-ந் தேதி பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வுடன் தொடங்கியது. 11-ந் தேதி கணபதி பூஜையும், முதல் கால யாகபூஜையும், நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜையும், 3-ம் கால யாகபூஜையும், நேற்று 4-ம் கால யாக பூஜையும் நடந்தது.

தொடர்ந்து யாக கலசங்கள் மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரிய மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்