ஈரோடு சாய்பாபா கோவிலில் பாணலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
ஈரோடு சாய்பாபா கோவிலில் பாணலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் விஸ்வரூபம் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பாணலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அன்னம் தயாரிக்கப்பட்டு, பாணலிங்கேஸ்வரருக்கு சாற்றப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த ஈஸ்வரனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.