கோபி அருகே கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோபி அருகே கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-09-08 21:35 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பவானி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன்பின்னர் மூல மந்திர ஹோமம் நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் 3-ம் கால யாக பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 8.15 மணி அளவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதை தொடர்ந்து மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா அலங்காரம் செய்யப்பட்டு தச தரிசனம், தசதானம் நடந்தது. அதன்பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலிங்கியம், கோபி, அவ்வையார்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் உள்பட பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டுச் சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்