கூத்தூர் தர்கா கந்தூரி விழா

கூத்தூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-06-02 15:54 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே கூத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் செய்யது ஹசன் பீர்காய்பு ஒலியுல்லாஹ் தர்கா கந்தூரி உள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக கூத்தூர் பள்ளிவாசலில் இருந்து, கொடி ஊர்வலம் எடுத்து வரப்பட்டு தர்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் பாத்திஹா ஒதி கொடி ஏற்றப்பட்டது. வருகிற 10-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலை சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், 14-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கொடியேற்று விழாவில் கூத்தூர், குருக்கத்தி பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்