கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

ரிஷிவந்தியம் அருகே கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-24 18:48 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அடுத்த மண்டகப்பாடியில் பழமைவாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 15-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் கூத்தாண்டவர் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் ஊராட்சி தலைவர் சுதா தணிகைவேல் உள்பட திரளான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்