கே.எம்.ஜி. கல்லூரி மாணவர்கள் கலைத்திறன் போட்டிகளில் சாதனை
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவர்கள் கலைத்திறன் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.;
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகளில் கலந்து கொண்டு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கணிதத்துறை மாணவர்கள் இரண்டாம் பரிசு பெற்றனர்.
அவர்களை கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி.முத்துக்குமார், கல்லூரி முதல்வர் செந்தில்ராஜ், துறைத் தலைவர் என்.ராஜி, மோகன் ஆகியோர் பாராட்டினர்.