மழலையர் பட்டமளிப்பு விழா

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-03-19 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார். பள்ளியின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். முதல்வர் தேவராஜூலு வரவேற்றார். டாக்டர் விவேகானந்தன், டாக்டர் இந்துமதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். தற்போதைய நிலையில் மொபைல் போன் தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கான நேரத்தை குறைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். புத்தகம் வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் கடந்த கால அனுபவங்களை தங்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்