இருள் சூழ்ந்து கிடக்கும் கிணத்துக்கடவு மேம்பால பகுதி

மின் விளக்குகள் ஒளிராததால் கிணத்துக்கடவு மேம்பால பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது. அங்கு வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

Update: 2023-07-31 20:45 GMT

கிணத்துக்கடவு

மின் விளக்குகள் ஒளிராததால் கிணத்துக்கடவு மேம்பால பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது. அங்கு வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

கிணத்துக்கடவு மேம்பாலம்

கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம், ஆச்சிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே நெடுஞ்சாலை துறை சார்பில் 1,000-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் நான்கு வழிச்சாலையில் பயணிக்க ஏதுவாக இருந்தது.

ஒளிராத தெருவிளக்குகள்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே பல இடங்களில் மின் விளக்குகள் ஒளிராமல் கிடக்கின்றன. குறிப்பாக கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சில இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மின்விளக்குகள் ஒளிராமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால், பாதசாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

வழிப்பறி சம்பவங்கள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கிணத்துக்கடவு மேம்பாலம் அருகில் ஏற்கனவே செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. தற்போது மின் விளக்குகளும் ஒளிராமல் கிடப்பதால், அந்த குற்ற வழக்குகள் அதிரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு செல்லவே அச்சமாக உள்ளது. எனவே மின் விளக்குள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்