கீழ்வேளூர் தாசில்தார் பொறுப்பேற்பு

கீழ்வேளூர் தாசில்தார் பொறுப்பேற்பு;

Update:2023-06-13 00:15 IST

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் புதிய தாசில்தாராக ரமேஷ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பு நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார் (நிலம் எடுப்பு பிரிவு) பணியாற்றி வந்தார். இங்கு தாசில்தாராக பணியாற்றிய ரமேஷ்குமார் கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற தாசில்தாரை வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்