சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞர் புதுக்கோட்டையில் மீட்பு.!

சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞரை 10 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

Update: 2023-06-22 14:23 GMT

சென்னை,

சென்னை, திருவேற்காடு அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டார்.

நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடிந்து திரும்பிய போது காரை மறித்த கும்பல் அவரை கடத்தி உள்ளனர். நிதி நிறுவனம் நடத்திய அவரது சகோதரர் ரூ.3 கோடி மோசடி செய்ததால் கடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் தேவ் ஆனந்தை கடத்தி சென்ற மர்மகும்பலை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், கத்தி முனையில் கடத்தப்பட்ட தேவ் ஆனந்தை பொன்னமராவதி அருகே காவல் துறையினர் சினிமா பாணியில் காரை சேஸ் செய்து மீட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை போலீசார் பிடித்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்போது பிடிபட்டுள்ள 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், எஞ்சியவர்கள் எங்கு உள்ளனர் என்பதுகுறித்தும் அவர்களிடம் விசாரனை நடத்திவருகின்றனர்.  


Full View


Tags:    

மேலும் செய்திகள்