லோடு ஆட்டோவில் கடத்திய40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
சாத்தான்குளம் அருகே லோடு ஆட்டோவில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தாலுகா பகுதியில் ரேஷன் அரிசியை சிலர் பதுக்கி வைத்து, வெளியிடங்களுக்கு கடத்துவதாக புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வட்ட வழங்கல் அலுவலர் அகிலா மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சாத்தான்குளம் அருகிலுள்ள பழங்குளம் கிராமம் சடையன் கிணறு விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ேலாடு ஆட்டோவை நிறுத்தினர். அதிகாரிகளை பார்த்தவுடன் லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
லோடு ஆட்டோவை அதிகாரிகள் ேசாதனை நடத்தியபோது, அதில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லோடு ஆட்டோவை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தாசில்தார் ஒப்படைத்தார்.
இதுகுறித்து அவரது புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோடு ஆட்டோ டிரைவரை தேடிவருகின்றனர்.