காய்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் குஷ்பு அனுமதி
நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை,
நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் குஷ்புக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், தயாரிப்பாளராக இருந்து வருபவருமான நடிகை குஷ்பு அரசியலில் பிரபலம் ஆகி உள்ளார் என்பதும் அவர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார் என்பதும் அனைவரும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் திடீரென ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் 'நான் ஏற்கனவே சொன்னது போல் புளூ காய்ச்சல் என்பது மிகவும் மோசமானது. அது என்னை சமீபத்தில் பாதித்துவிட்டது. காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நான் அதிர்ஷ்டவசமாக அப்பல்லோ மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை பெற்று வருகிறேன்.
உங்கள் உடல் சோர்வாக இருந்தால் போது தயவு செய்து அதன் அறிகுறியை புறக்கணிக்காமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவை அடுத்து அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.