கீழப்பாவூர் யூனியன் கூட்டம்
கீழப்பாவூர் யூனியன் கூட்டம் அதன் தலைவர் காவேரி சீனித்துரை தலைமையில் நடந்தது.
பாவூர்சத்திரம்:
கீழ்ப்பாவூர் யூனியன் சிறப்பு கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 15-வது நிதிக்குழு மானியம் 2023-24-ம் ஆண்டிற்கு வரையறுக்கப்பட்ட நிதியில் குடிநீர் பணிகள், சுகாதார பணிகள், வரையறுக்கப்படாத நிதியில் தார்சாலை அமைத்தல், பயணிகள் நிழற்குடை அமைத்தல், போன்ற பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் வலன்ராஜா, தர்மராஜ், நாகராஜ், முருகேசன், ஜான்சி, ஹேமா, மகேஷ்வரி, ராஜேஸ்வரி, ராதாகுமாரி, கனகஜோதி, மரியசெல்வமேரி, சுரேஷ்லிகோரி, சரவணன், புவனா ஆகியோர் கலந்து கொண்டனர்.