கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-06-03 18:52 GMT

நொய்யல், 

கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே கொண்டாடப்பட்டது. விழாவிற்கு புகழூர் நகராட்சித் தலைவரும், கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி, சலவை பெட்டி, தையல் எந்திரம் மற்றும் மருத்துவ உதவித் தொகை போன்றவற்றை 85 பயனாளிகளுக்கு வழங்கினார். அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. அதேபோல் நொய்யல் குறுக்குச்சாலை, வேட்டமங்கலம், மரவாபாளையம், சேமங்கி, கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், புன்னம்சத்திரம், குந்தாணி பாளையம், நல்லிக் கோவில், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புன்னம்சத்திரம் முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், புகழூர் நகராட்சி வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் புகழூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்