கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

கடையநல்லூரில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update:2022-08-07 20:45 IST

கடையநல்லூர்:

கடையநல்லூரில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கடையநல்லூர் நகரமன்ற தலைவர் ஹபிபுர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடையநல்லூர் நகர தி.மு.க. சார்பில் கொல்லம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கூண்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் மாவட்ட செயலாளர் செல்லத்துரை மற்றும் நகர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்