காருகுடி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
காருகுடி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, காருகுடி கிராத்தில் விநாயகர், முருகன், கைலாசநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாள், அய்யனார், மாரியம்மன், கருப்பையா, பாலாயி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில்களின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு நடந்தது. இதையடுத்து விநாயகர், முருகன், கைலாசநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆகிய சுவாமிகளுக்கும் மற்றும் நவக்கிரகங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாரியம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அய்யனார், கருப்பையா, பாலாயி சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமிகளை தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.