கார்த்திகை கடைஞாயிறு விழா பந்தக்கால் முகூர்த்தம்
கார்த்திகை கடைஞாயிறு விழா பந்தக்கால் முகூர்த்தம்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. அப்போது பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் கோபுர வாசலில் பந்தக்கால் நடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு உமாதேவி, மேலாளர் நடராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.