பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா
சேரன்மாதேவி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 6-ந் தேதி நடக்கிறது
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை உற்சவர் திருவீதி உலாவும், கொழுந்துமாமலையில் தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. சேரன்மாதேவி பஸ்நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.