தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் - கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்..
சென்னை,
தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்..
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
இடவசதியோடும் ,நவீன தொழிநுட்பத்துடன் , அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும்.
கூடுதலாக ஒரு சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகத்தினை திருச்சசியில் அமைத்து ,சட்டப்பேரவை நிகழ்வுகளை சென்னையிலும்,திருச்சியிலும் நடத்திடவும்,அமைச்சரவைக் கூட்டத்தை சென்னையில் நடத்தாமல் வேறு ஊர்களிலும் நடத்த வேண்டுமென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .