கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ஓசூரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஓசூர்
ஓசூர் ரெயில் நிலையம் எதிரே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 9-ல் உள்ள கற்பக விநாயகர் கோவில் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள் நடத்தி பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓதி வேத விற்பன்னர்கள், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில், மாநகராட்சி கவுன்சிலர் லட்சுமி ஹேமகுமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.