காரியாபட்டி பஸ்நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்

ரூ.2 கோடியில் காரியாபட்டி பஸ்நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கின.

Update: 2023-09-01 21:50 GMT

காரியாபட்டி, 

ரூ.2 கோடியில் காரியாபட்டி பஸ்நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கின.

பஸ் நிலையம்

காரியாபட்டியைச் சுற்றி 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள பொதுமக்களும் பொருட்கள் வாங்க, கல்வி பயில என அனைத்து தேவைகளுக்கும் காரியாபட்டிக்கு தான் வருகின்றனர்.

காரியாபட்டி பஸ் நிலையத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் எண்ணற்ற பஸ்கள் வந்து செல்கின்றன. அதிலும் குறிப்பாக காலை, மாலை ேநரங்களில் அதிக பஸ்கள் வந்து செல்வதால் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

விரிவாக்க பணிகள்

இதனால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கின. பேரூராட்சி நிர்வாகம் உத்தரவின் பேரில் பஸ்நிலைய கிழக்கு பகுதிகளில் கடைக்காரர்கள் கடைகளை காலி செய்து வருகின்றனர். விரைவில் கட்டிடப்பணி தொடங்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்