480 போலீசாருக்கு கராத்தே பயிற்சி

வேலூரில் பயிற்சி பெறும் 480 போலீசாருக்கு கராத்தே பயிற்சியளிக்கப்பட்டது.

Update: 2022-06-17 17:04 GMT


வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 230 பெண் போலீசாருக்கும், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 250 ஆண் போலீசாருக்கும் 9 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவின்பேரில் வேலூரில் உள்ள ஜப்பான் ஷிட்டோ-ராய் கராத்தே பள்ளி சார்பில் மாஸ்டர்கள் ரமேஷ், லட்சுமணன் ஆகியோர் 480 போலீசாருக்கு 3 மாதம் கராத்தே தற்காப்பு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இதில் போலீசார் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை லாவகமாக மடக்கி பிடிக்கவும், கத்தி, கம்பு உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கினால் தடுத்து அவர்களை தாக்குவது, கும்பலாக சூழ்ந்து அடித்தால் எப்படி சமாளிப்பது போன்ற தற்காப்பு பயிற்சி போலீசாருக்கு கற்று கொடுக்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்