வளைகாப்பு முடிந்து போலீஸ் நிலையம் சென்ற கா்ப்பிணி சங்கராபுரத்தில் பரபரப்பு

வளைகாப்பு முடிந்து போலீஸ் நிலையம் சென்ற கா்ப்பிணியால் சங்கராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-11 18:45 GMT

சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா(வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கல்பனா கா்ப்பமானார். இதையடுத்து, அவருக்கு கடந்த 9-ந்தேதி அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. இதற்காக கல்பனா, வீட்டில் இருந்து மண்டபத்திற்கு புறப்பட்டபோது, அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் பிச்சன் மகன் செல்வம்(42) என்பவர் அங்கு வந்து, கல்பனாவைகொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து வளைகாப்பு முடிந்த பின்னர், கல்பனா தனது கணவருடன் சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, செல்வம் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளைகாப்பு முடிந்த உடனே, கர்ப்பிணி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்