சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2023-10-30 20:56 GMT

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதனால் இந்த மூன்று மாத காலமும் கன்னியாகுமரியின் சீசன் காலமாக கருதப்படுகிறது.

இதேபோல ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இதனால் இந்த 2 மாதமும் கோடை விடுமுறை சீசனாக கருதப்படுகிறது.

வெறிச்சோடியது

இந்தநிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை திறந்து பணிகள் நடைபெற்றது. இதனால், கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கடற்கரை பகுதிகள், பகவதியம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டமின்றி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்