கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம்

திருச்சுழி அருகே கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-08-19 19:07 GMT

திருச்சுழி,

திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள கண்ணபிரான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்