கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் கைது
கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது பிச்சைப்பிள்ளையேந்தல் கிராமம். இங்கு கஞ்சா விற்பனை நடப்பதாக திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது கண்மாய் பகுதியில் நின்ற 16 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதில் அந்த சிறுவன் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.