ரெயிலில் திருப்பூருக்கு கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

ரெயிலில் திருப்பூருக்கு கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை திருப்பூர் அருகே ரெயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-23 13:04 GMT

ரெயிலில் திருப்பூருக்கு கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை திருப்பூர் அருகே ரெயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரெயிலில் கஞ்சா கடத்தல்

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரெயிலில் வாலிபர் ஒருவர் திருப்பூருக்கு கஞ்சா கடத்துவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவை ரெயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலீசார் ராஜலிங்கம், சையது மொகமது, கோபால், சுரேஷ், சுஜித் உள்ளிட்டோர் நேற்று காலை ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தன்பாத்-ஆலப்புழா ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த பெட்டியில் ஒரு பையுடன் சந்தேகத்திற்கிடமாக இருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

5 கிலோ பறிமுதல்

அப்போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் ஒப்படைத்தனர். அவர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஒடிசா மாநிலம் பர்கார்த் பகுதியை சேர்ந்த சதானந்தா படேய் (வயது 28) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்