கனிமொழி எம்.பி., வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. இவர் மக்கள் பணிக்காக தூத்துக்குடி குறிச்சி நகர் பகுதிகளில் தற்காலிகமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில கனிமொழி எம்.பி வீட்டில் இருக்கும்போதே மர்மநபர் ஒருவர் புகுந்ததாக கூறப்படுகின்றது.
இதுதொடர்பாக கனிமொழி எம்பி அலுவலக தரப்பினர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர் குறித்து விசாரணை நடத்தினர். தற்போது, தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அவரின் தூத்துக்கடி இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி வசிக்கும் வீட்டில் மர்மநபர் புகுந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.