திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி..? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த மாதம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Update: 2022-10-07 03:30 GMT

சென்னை,

திமுக உட்கட்சித் தோ்தலில் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா்.

இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

திமுகவின் தற்போதைய சட்ட விதிகளின்படி ஐந்து பேர் துணைப் பொதுச் செயலாளர்களாக இருந்த நிலையில்,திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவில் மகளிருக்கான துணைப் பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில், கனிமொழி எம்.பி நியமனம் செய்யப்பட உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

திமுகவின் மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழி, புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை மகளிர் அணி பொறுப்பையும் கவனிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்