காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஏற்கனவே 9 நபர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.;
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 22ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 9 நபர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அளித்திருந்தார்