வேலூர் கம்பன் கழகம் சார்பில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் கம்பன் விழா நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ரத்தினநடராஜன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் கவிஞர் ச.லக்குமிபதி வரவேற்றார். வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
விழாவில் "கம்பன் மிகவும் வியந்து போற்றுவது ராமனின் அருமையே, சீதையின் பெருமையே" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற நடுவராக வக்கீல் ராமலிங்கம் இருந்தார்.
நிகழ்ச்சியில் மறைந்த புதுச்சேரி செயலாளர் முருகேசன், விஜயதசமி இலக்கிய குழு தலைவர் ஜெயராமன் ஆகியோரது படங்கள் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பேராசிரியர் பொன் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீரா ஏழுமலை நன்றி கூறினார்.