காமாட்சி அம்மன் கோவில் திருவிழா
மேலூரில் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
மேலூர்,
மேலூரில் பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 44-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். சக்திகரகம் எடுத்தல், கோவில் முன்பு பொங்கல் வைத்தல், திருவிளக்கு பூஜை, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தும் ேநர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி எடுத்த பக்தர்கள் மேலூரில் சேனல் ரோடு, நகை கடை பஜார், சந்தைப்பேட்டை, பெரியகடைவீதி, செக்கடி பஜார் வழியாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பின்னர் முத்துக்காமாட்சி அம்மன் சுவாமி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.