ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் சாலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கட்டுப்பாட்டில் காமராஜ்பவன் என்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் அஸ்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களும் மரியாதை செலுத்தினார்கள்.