கல்யாணராமர் சுவாமி கோவில் தேரோட்டம்
கல்யாணராமர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் பிரசித்தி பெற்ற கல்யாணராமர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் கல்யாணராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் கல்யாணராமர் பட்டாடை அணிந்து எழுந்தருளினார். இதனைதொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். அப்போது பெண்கள் தேங்காய், பழங்களை வைத்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மீமிசல் மற்றும் சத்திரப்பட்டினம் கிராம மக்கள் செய்திருந்தனர். கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.