கல்லாமொழி புனித அந்தோணியார் ஆலய திருவிழா

கல்லாமொழி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2023-01-17 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கடந்த 14-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடந்தது. இதில் மணப்பாடு மறைவட்ட முதன்மைகுரு ஜான்செல்வம் மற்றும் பங்குதந்தையர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பலி, உறுதிப்பூசுதல், திருவருட்சாதனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி மாலையில் நடந்து வருகிறது. வருகிற 25-ந்தேதி மாலையில் சிறப்பு ஆராதனையும், 26-ந்தேதி பெருவிழா திருப்பலியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்