நாளை கால்கோள் விழா:மதுரை அ.தி.மு.க. மாநாடு, சித்திரை திருவிழா போல் நடைபெறும்-ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
மதுரை அ.தி.மு.க. மாநாடு சித்திரை திருவிழா போல் நடைபெறும் என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டிற்கான கால் கோள் விழா நாளை நடக்கிறது.
மதுரை அ.தி.மு.க. மாநாடு சித்திரை திருவிழா போல் நடைபெறும் என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டிற்கான கால் கோள் விழா நாளை நடக்கிறது.
விலையேற்றம்
அ.தி.மு.க.வின் மாநில மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி, மதுரை ரிங்ரோடு கருப்பசாமி கோவில் எதிரே உள்ள திடலில் நடக்கிறது. இந்த மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
அ.தி.மு.க. மதுரை மாநாட்டினை தேசமே திரும்பி பார்க்கும். அதில் கட்சியினரும், பொதுமக்களும் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும். மதுரையின் சித்திரை திருவிழா போல் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கான கால்கோள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை)காலை 7 மணிக்கு நடக்கிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் அதிக உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைத்திடுவோம்.
கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சொத்துவரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பாதாள சாக்கடை வரி உயர்வு என வாக்களித்த மக்களை வஞ்சித்து நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தையும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டு காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மணல் கடத்தல், போதை பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு, கள்ளச்சாராயத்தால் பல உயிர்கள் சாவு, அரசு டாஸ்மாக்கிலும் போலி மதுபானம், அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய முதல்-அமைச்சரை கண்டிக்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை அ.தி.மு.க. மாநாடு சித்திரை திருவிழா போல் நடைபெறும் என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டிற்கான கால் கோள் விழா நாளை நடக்கிறது.
மதுரை மேற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, தாய் தமிழ்நாட்டை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தினார். கட்சியின் எளிய தொண்டனும் மக்கள் சேவையாலும், உழைப்பாலும் உயர்ந்த இடத்திற்கு வரலாம் என்ற வரலாற்றை எடப்பாடி பழனிசாமி உருவாக்கித் தந்து, ஜனநாயகத்தை கட்டி காத்து, எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாைம இல்லாத நிலை வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்கினார். மேலும் அவர் கடந்த 75 நாட்களில் ஒரு கோடியே, 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து புதிய வெற்றி சரித்திரம் படைத்து காட்டி உள்ளார். உலக அரசியல் கட்சிகளின் அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் 7-வது இடத்திலும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்தில் நிலை நிறுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா போல இந்த மாநாடு நடைபெறும்.
இவ்வாறு தீர்மான நிறைவேற்றப்பட்டன.