கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்

தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-24 11:26 GMT

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்கான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்கள் மூலமாக இதுவரை சுமார் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானதா? என்பது குறித்து தன்னார்வலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளின் முதல் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்