கைலாசநாதர் கோவில் தேரோட்டம்
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கைலாசநாதா் கோவில்
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர்- சவுந்தரவல்லி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் ெகாடியேற்றப்பட்டது.
தேரோட்டம்
தொடர்ந்து 10 நாட்கள் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜை, வீதிஉலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாத சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையத்தை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.