கச்சத்தீவு விவகாரம்: கேட்கும் நிதியை கொடுக்காமல் மக்களை திசை திருப்பும் பிரதமர்: ஆர்.எஸ்.பாரதி தாக்கு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கச்சத்தீவு விவகாரம் தலைதூக்கியுள்ளது.;

Update: 2024-04-01 08:29 GMT

சென்னை,

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தி.மு.க. மீது பா.ஜ.க. குற்றம் சாட்டி வரும் நிலையில், தி.மு.க.வும் எதிர்வினையாற்றி வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "தோல்வி பயத்தின் காரணமாக கலர் கலராக பொய் சொல்லி வருகின்றனர். கேட்கும் நிதியை கொடுக்காத பிரதமர் மோடி, மக்களை திசை திருப்புகிறார்.

கச்சத்தீவை கொடுக்க கூடாது என்று, கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். கச்சத்தீவுக்கு எதிராக தமிழகம் முழுவதும், தி.மு.க. கூட்டம் நடத்தியது. நானும் அப்போது பங்கேற்றேன்.

தமிழினத்தை அழித்த இலங்கை திவாலான போது, ரூ.34,000 கோடி கொடுத்தவர் பிரதமர் மோடி. இலங்கை திவாலான போது, கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே? இலங்கை மின் பணிகளை அதானிக்கு வாங்கி கொடுத்ததற்கு பதிலாக, கச்சத்தீவை மீட்டிருக்கலாமே?" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்