ஜோதி முருகானந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்

வடலூர் ஜோதி முருகானந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

Update: 2022-12-12 18:45 GMT

வடலூர்

வடலூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஜோதி முருகானந்த சாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி காலை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 6 கால அகவல் பாராயணம், சிறப்பு பூஜை மற்றும் ஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மறுநாள் காலை 10:30 மணிக்கு யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு விநாயகர், வள்ளலார் மற்றும் முருகானந்த ஆசிரம சன்னதிகளில் கும்பாபிஷேகமும், சிறப்பு வழிபாடும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்