வேலை வாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-07-18 17:40 GMT

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்