'விடியல் - 2022' வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பில் சென்னை பரங்கிமலையில் உள்ள சி.எஸ்.ஐ. செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளியில் நேற்று ‘விடியல் - 2022' வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 62 நிறுவனங்கள் நடத்திய நேர்காணலில் 1,800 பேர் கலந்துகொண்டனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 700 பேருக்கு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜோஸ்வா ஜெரார்டு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.