போடி அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

போடி அருகே வீடு புகுந்து 5 பவுன் நகையை திருடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-26 21:00 GMT

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலாவதி (வயது 70). இவர் கடந்த 24-ந்தேதி இரவு தனது வீட்டை பூட்டி விட்டு உள்ளே தூங்கி கொண்டிருந்தார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பக்கத்தில் கழற்றி வைத்திருந்தார். பின்னர் அவர் அசந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், கலாவதியின் 5 பவுன் நகை மற்றும் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பொருட்களையும் திருடினார்.

இதற்கிடையே திடுக்கிட்டு எழுந்த கலாவதி, வீட்டுக்குள் திருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் சத்தம்போடவே மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் கலாவதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைைய திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்