சின்னமனூரில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

சின்னமனூரில் நகைக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-08-01 02:30 IST

சின்னமனூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவர், சின்னமனூர் நகைக்கடை பஜாரில், காசு கடை சந்தில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தனது தொழில் தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் கடனை திரும்பி செலுத்த முடியவில்லை.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கண்ணன் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்