வீடு புகுந்து 5½ பவுன் நகை திருட்டு
நெல்லையில் வீடு புகுந்து 5½ பவுன் நகை திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 52). இவர் தற்போது தனது மகனுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் லட்சுமி தனது வீட்டில் மேஜையில் வைத்து இருந்த 5½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போனதாக டவுன் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் இரவில் லட்சுமியின் வீட்டு மாடி வழியாக ஏறி உள்ளே நுழைந்து தங்க சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.