உடற்பயிற்சி செய்த போது நகை வியாபாரி 'திடீர்' சாவு

மார்த்தாண்டத்தில் உடற்பயிற்சி செய்த போது நகை வியாபாரி ‘திடீர்’ சாவு

Update: 2023-07-20 18:45 GMT

குழித்துறை, 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெள்ளத்தறா பகுதியை சேர்ந்தவர் அனலின் (வயது48), நகை வியாபாரி. இவர் வியாபாரம் தொடர்பாக மார்த்தாண்டத்தில் பகுதியில் கடந்த சில தினங்களாக தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றார். அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி கீழே சுருண்டு விழுந்தார். உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்று குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்